logo
வேளாண் திட்டங்களை திரும்பப் பெறக்கோரி காஞ்சிபுரத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம்

வேளாண் திட்டங்களை திரும்பப் பெறக்கோரி காஞ்சிபுரத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம்

28/Sep/2020 11:44:30

விவசாயிகள் விரோதச் சட்டங்களை மத்திய பாஜக அரசு திரும்பப் பெற வலியுறுத்தி திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி மத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதேபோல்,  வட சென்னையி்ல் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தென் சென்னையில் மதிமுக பொதுச்செயலர் வைகோ, கடலூரில் தொல். திருமாவளவன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

 மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் திமுக மற்றும் தோழமை கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் சார்பில் காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி களத்துமேடு  பகுதியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். முன்னதாக, அப்பகுதியில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண்களை சந்தித்து மு.க.ஸ்டாலின் பேசினார். தொடர்ந்து, பாஜக அரசின் வேளாண் சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது என ஸ்டாலின் முழக்கமிட்டார். போராட்டத்தில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், பாஜக அரசும் அதிமுக அரசும் சேர்ந்து விவசாயிகளை வஞ்சிக்கின்றன என குற்றம்சாட்டினார். விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டத்துக்கு அதிமுக துணை போய் உள்ளது. தன்னை விவசாயி எனக் கூறும் முதல்வர் தான் விவசாயிகளுக்கு எதிரான செயல்பாட்டை ஆதரிக்கிறார். இதனை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சுமார் 3,700 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றார்.



Top