logo
திருமயம் ஒன்றியப் பகுதியில் அதிமுக பூத் கமிட்டியின் தேர்தல் ஆலோசனைக் கூட்டம்

திருமயம் ஒன்றியப் பகுதியில் அதிமுக பூத் கமிட்டியின் தேர்தல் ஆலோசனைக் கூட்டம்

21/Mar/2021 06:51:16

புதுக்கோட்டை, மார்ச்:திருமயம்  ஒன்றியப்பகுதிக்கான அதிமுக பூத் கமிட்டியின் ஆலோசனைக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருமயம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில்தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தலைவர் பி.கே. வைரமுத்து போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணி கட்சிகளான  பாஜக, பாமக  உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக  திருமயம் சட்டமன்ற  தொகுயிலுள்ள அரிமளம், பொன்னமராவதி, திருமயம் ஆகிய ஒன்றியங்களில் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி(பூத் கமிட்டி) முகவர்களுடனான ஆலோசனைக்கூட்டத்தை வேட்பாளர் பி.கே. வைரமுத்து நடத்தி வருகிறார். அதன்படி, திருமயம் ஒன்றியத்தைச்சேர்ந்த முகவர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


முதலாவதாக விராச்சிலை கற்பகவினாயகா திருமண மண்டபத்தில் வேட்பாளர் பி.கே. வைரமுத்து தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் விராச்சிலை, நெய்க்கோணம், அரங்கினான்பட்டி, வி. லட்சுமிபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பூத் கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் .

இதையடுத்து  குழிபிறை திருவள்ளுவர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில்   ஆத்தூர், குழிபிறை, பனையப்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பூத் கமிட்டி  உறுப்பினர்களும், மலையக்கோவில் விளக்கு திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் குல மங்கலம், மேலப்பனையூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பூத் கமிட்டி உறுப்பினர்களும், நச்சாந்துபட்டி  மகாலட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் நற்சாந்து பட்டி, கோட்டூர், பேரையூர், ராராபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பூத் கமிட்டி உறுப்பினர்களும்,

லெணாவிலக்கு சாஸ்தா திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில்  லெம்பலக்குடி, அரசம்பட்டி, புலிவலம், கோட்டையூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பூத் கமிட்டி உறுப்பினர்களும், கோனாபட்டு- மெ.கா. பிள்ளையார்கோயில்  திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில்  கோனாபட்டு, ஆதனூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பூத் கமிட்டி  உறுப்பினர்களும், வெங்களூர் இஸ்லாமியர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் வெங்களூர், பள்ளிவாசல் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பூத் கமிட்டி உறுப்பினர்களும்,

பி.அழகாபுரியில்   அழகுராஜா திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் நெய்வாசல், பி. அழகாபுரி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பூத் கமிட்டி உறுப்பினர்களும், துலையானூரில்  நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் துலையானூர் கிராம பூத் கமிட்டி உறுப்பினர்களும், ராங்கியம் வலத்தியம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில்  ராங்கியம், குருவிக்கொண்டான்பட்டி, சேதுராபட்டி,  மிதிலைப்பட்டி, கண்ணனூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பூத் கமிட்டி உறுப்பினர்களும், திருமயம் ஏகேபி- திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில்  திருமயம், ஊனையூர், இளஞ்சாவூர், மேலூர் ஆகிய கிராமங்களைச்  சேர்ந்த பூத் கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

  


Top