logo
 நவராத்திரி: சாந்தநாதசுவாமி கோயில் சந்நிதி வீதியில் கொலு பொம்மை  விற்பனை தொடங்கியது

நவராத்திரி: சாந்தநாதசுவாமி கோயில் சந்நிதி வீதியில் கொலு பொம்மை விற்பனை தொடங்கியது

28/Sep/2020 11:25:28

    புதுக்கோட்டையில்  நவராத்திரி விழாவை முன்னிட்டு  சாந்தநாத சுவாமி  சந்நிதி தெருவில் கொலு பொம்மை  விற்பனை தொடங்கியது.  நவராத்திரி பண்டிகை அக்டோபர்  17 -இல் தொடங்கி 25-ஆம்  தேதி வரை நடைபெறுகிறது. நவராத்திரியை முன்னிட்டு கோயில், வீடுகளில் விதவிதமான கொலு பொம்மைகளை வைத்து வழிபடுவது வழக்கம். நவராத்தியின்போது பழங்கள், பொரி, நாட்டு சர்க்கரை, கடலை, அவல் போன்றவற்றை வாழை இலையில் வைத்துப் . மலர்கள், பழங்கள், தானிங்கள் ஆகியவற்றை  9 நாள்களும்  9 வகைகளில் படைக்க வேண்டும். நவராத்திரி பண்டிகை  முடியும். ஒன்பதாவது நாளில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. சரஸ்வதி பூஜைக்கு அடுத்த நாள் விஐயதசமி. நவராத்திரியை வட மாநிலங்களில் துர்கா பூஜை என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். இந்நிலையில், நவராத்திரியின்போது பெண்கள் வீடுகளில் கொலு வைத்து விரதம் இருந்து, அம்மனை வழிபட்டால் நன்மை கிடைக்கும் என்பது ஐதீகம். நவராத்திரியின் முக்கிய அம்சம் கொலு வைப்பதாகும். பல படிகளை கொண்ட மேடையில், பலவித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைக்கப்படும்.                                                                                                            நவராத்திரி  கொலு பொம்மை   புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி  சந்நிதி தெருவில் உள்ள ஜி.டி.என். பூஜை விற்பனையகத்தில் கொலு கண்காட்சி மற்றும் விற்பனை  தொடங்கியது. இதில் கலையம்சம் மிக்க சரஸ்வதி, லெட்சுமி,  முருகன், விநாயகர், மாரியம்மன்,மீனாட்சி, துர்க்கை, மூகாம்பிகை, பஞ்சமுக ஆஞ்சநேயர், ராமாயணம், தசாவதாரம், மகாபாரதம், திருமண செட் போன்ற பல வண்ண பொம்மைகளும் இடம்பெற்றுள்ளன.  மேலும்,  புத்தர், வள்ளலார், பக்தமீரா, மகாத்மாகாந்தி, அப்துல்கலாம்,காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜிஆர், ஜெயலலிதா  உள்ளிட்டோரின்   வண்ண உருவ பொம்மைகளும் சிறியது முதல் பெரிய அளவில்  விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் பலர்  ஆர்வமுடன் வாங்கி செல்வதை பார்க்கமுடிகிறது. poto by delux sekar-pdk   

 

.

Top