logo
புதுக்கோட்டை கிங்டவுன் ரோட்டரி சார்பில் நகராட்சி முன்களப்பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்

புதுக்கோட்டை கிங்டவுன் ரோட்டரி சார்பில் நகராட்சி முன்களப்பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்

06/Jul/2021 09:24:45

புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டை கிங்டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் கொரானோ நிவாரண பணிகளில் முன்களப்பணியாளர்களாக பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு 9 மண்டலங்களுக்கு தேவையான 45 ஜோடி   மண்வெட்டி, அரிவாள் மற்றும் மண் சட்டிகள் வழங்கப்பட்டது. 

புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா  முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில் , கிங்டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் கைலாசம் பங்கேற்று  நகராட்சி ஆணையர் (பொ) கிருஷ்ணவேணி, நகராட்சி பொறியாளர் ஜீவா சுப்பிரமணியம்  ஆகியோரிடம் உபகரணங்களை  ஒப்படைத்தனர்.  

நிகழ்ச்சியில் ரோட்டரி மாவட்ட பொதுச்செயலாளர் கான்,  கிங்டவுன் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் சவரிமுத்து, அசோகன், நகர திமுக செயலாளர் க.நைனாமுகம்மது, ரோட்டரி சங்க நிர்வாகி கண.மோகன்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  


Top