10/Jul/2021 05:17:51
புதுக்கோட்டை, ஜூலை: பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் புதுக்கோட்டையில் நூதன முறையில் ஏணி மீது ஏறி நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மக்கள் நீதி மையம் சார்பில் புதிய பேருந்து நிலையம் அருகே பெட்ரோல் டீசல் விலை தினந்தோறும் ஏறிக்கொண்டே செல்கிறது என்பதை நூதன முறையில் வெளிப்படுத்தும் விதமாக நடைபெற்ற கண்டனஆர்ப்பாட்டத்துக்கு மாநில நிர்வாகி கார்த்திக் மெஸ் மூர்த்தி தலைமை வகித்தார்.
இதில் சமையல் எரிவாயு விலை ஏற்றத்தை கண்டித்து கேஸ் சிலிண்டர் ஒன்றுக்கு மாலை அணிவித்து சடங்கு செய்தனர். மேலும் பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு கேஸ் விலை ஏறிக் கொண்டே செல்வதை வெளிபடுத்தும் விதமாக ஏணியில் ஏறி நூதன முறையில் கண்டன முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.