logo
ஆவூர், மழையூரில் ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய காளையர்கள்.

ஆவூர், மழையூரில் ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய காளையர்கள்.

08/Mar/2020 09:40:07


புதுக்கோட்டை மாவட்டம் ஆவூர் மற்றும் மழையூர் ஆகிய இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச்.8)ஜல்லிக்கட்டு  நடைபெற்றது.

  புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூர் அருகேயுள்ள ஆவூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன் தலைமை வகித்தார். ஜல்லிக்கட்டை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். இதில், புதுகை,தஞ்சை,திருச்சி, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 802 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்குவதற்கு 700 மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினர். மாடுகள் முட்டியதில் 21 பேர் காயமடைந்தனர்.

   இதேபோல, ஆலங்குடி அருகேயுள்ள மழையூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டை புதுக்கோட்டை கோட்டாட்சியர் தண்டாயுதபாணி தொடங்கி வைத்தார். இதில், புதுகை,தஞ்சை,திருச்சி, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 662 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை 350 மாடுவீரர்கள் கலந்துகொண்டு அடக்க முயன்றனர். அப்போது,, காளைகள் முட்டயதில் 15 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும்,பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் ஆய்வு செய்தார். ஆலங்குடி காவல்துணைக்கண்காணிப்பாளர் முத்துராஜா தலைமையிலான போலீஸார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

Top