logo
புதுக்கோட்டையில் முன்களப்பணியாளர்களுக்கு மன நல ஆலோசனை சேவை: சுகாதாரத்துறை அமைச்சர் தொடக்கம்

புதுக்கோட்டையில் முன்களப்பணியாளர்களுக்கு மன நல ஆலோசனை சேவை: சுகாதாரத்துறை அமைச்சர் தொடக்கம்

17/Jun/2021 10:38:18

புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டையில் முன்களப்பணியாளர்களுக்கு மன நல ஆலோசனை சேவைத்திட்டத்தை  சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வியாழக்கிழமை  தொடக்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  நடைபெற்ற  நிகழ்வில், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர்.எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல், காலநிலைமாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன்  ஆகியோர் பங்கேற்று, புதுக்கோட்டை மாவட்ட மனநலத்திட்டத்தின் சார்பில் மருத்துவத்துறை முன்களப் பணியாளர்களுக்கென அலைபேசி வழி மனநல ஆலோசனை சேவை வழங்கும்  மீண்டு வருவோம்  என்ற டெலிகவுன்சிலிங் சேவையை தொடக்கி வைத்து  அதற்கான 9488122199 என்ற அலைபேசி எண்ணை வெளியிட்டனர்.

இதில்மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர்.ஜெ.இராதாகிருஷ்ணன், மாவட்ட   ஆட்சியர் கவிதா ராமு, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்தூராஜா , கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை , மாவட்ட மனநலத் திட்ட அலுவலர்  கார்த்திக் தெய்வநாயகம் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

Top