logo
சட்டமன்ற தேர்தல்: ஏப்.4 முதல் 6 வரையிலும், மே.2 -ஆம் தேதியும்  அரசு மதுபானக்கடைகள் மூடப்படும்: மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவிப்பு

சட்டமன்ற தேர்தல்: ஏப்.4 முதல் 6 வரையிலும், மே.2 -ஆம் தேதியும் அரசு மதுபானக்கடைகள் மூடப்படும்: மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவிப்பு

27/Mar/2021 06:25:26

புதுக்கோட்டை, மார்ச்: சட்டமன்றத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளையொட்டி ஏப்ரல் 4 முதல் 6 -ஆம் தேதி வரையிலும், வாக்கு எண்ணிக்கை நாளான மே 2-ஆம் தேதியும் புதுக்கோட்டை மாவட்டத்திலுல்ள அனைத்து மதுபானக்கடைகள் மற்றும்  நட்சத்திர ஓட்டல்களில் உள்ள மதுக்கூடங்களும் மூடப்படும் என  மாவட்ட தேர்தல் அலுவலர் பி. உமாமகேஸ்வரி அறிவித்துள்ளார்.


இதுகுறித்து மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான பி.உமாமகேஸ்வரி வெளியிட்ட தகவல்:

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி்யும், வாக்கு எண்ணிக்கை மே.2 -ஆம் தேதியும் நடைபெறவுள்ளதை முன்னிட்டு  புதுக்கோட்டை மாவட்டத்தில் எதிர் வரும் 4.4.2021 அன்று காலை 10 மணி முதல் 6.4.2021 அன்று நள்ளிரவு 12 மணி வரையிலும் மற்றும் வாக்கு எண்ணும் நாளான 2.5.2021 அன்றும் அனைத்து அரசு மதுபானக்கடைகளும் அதனுடன் இணைந்த மது கூடங்களும், 3 ஸ்டார் ஓட்டல் பார்களும்  மூடப்பட்டு  டிரை டே(Dry Day)  அனுசரிக்கப்பட உள்ளது. எனவே, மேற்கண்ட நாட்களில்  முறைகேடான மது விற்பனையை காவல்துறையினர் தீவிரமாக கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

Top