logo
இந்திய பத்திரிகைகள் சங்கத்தலைவராக ஆதிமூலம் லட்சுமிபதி தேர்வு

இந்திய பத்திரிகைகள் சங்கத்தலைவராக ஆதிமூலம் லட்சுமிபதி தேர்வு

25/Sep/2020 09:07:58

 அகில இந்திய பத்திரிகைகள் சங்கமான, ஐ.என்.எஸ்., தலைவராக, தினமலர் கோவை பதிப்பு வெளியீட்டாளர், ஆதிமூலம் லட்சுமிபதி அவர்கள், ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு, பெங்களூருவில் வெள்ளிக்கிழமை நடந்த விழாவில் பதவி ஏற்றுக்கொண்டார். இண்டியன் நியூஸ் பேப்பர் சொசைட்டி(ஐ.என்.எஸ்.) என்றழைக்கப்படும், இந்திய பத்திரிகைகள் சங்கம், சுமார் 800 பத்திரிகைகளை உறுப்பினர்களாகக் கொண்ட அமைப்பு. இது, இந்திய அளவில், பத்திரிகைகளுக்கென்றே இருக்கும் ஒரே ஒரு அமைப்பு ஆகும். கடந்த, 1939 முதல் இதுவரை, இவ்வமைப்பின் தலைவராக, தமிழகத்தில் இருந்து கஸ்தூரி சீனிவாசன்( தி இந்து- 1947 -48), ராம்நாத் கோயங்கா,( தி இந்தியன் எக்ஸ்பிரஸ்- 1951 -52), சி.ஆர். சீனிவாசன், (சுதேசமித்திரன்- 1953 -54), ஜி.நரசிம்மன்(தி இந்து-1956 -57), என்.முரளி( தி இந்து-1983- 84), ஆர். லட்சுமிபதி( தினமலர்-1992 -93) ஆகியோர் பதவி வகித்துள்ளனர். இறுதியாக, கடந்த 1995 -96-இல் தினத்தந்தி  அதிபர், மறைந்த டாக்டர் சிவந்தி ஆதித்தனார் இந்த பதவியை வகித்த நிலையில், 25 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் தமிழகத்துக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தினமலர் வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப பிரிவு இயக்குனரும், கோவை பதிப்பு வெளியீட்டாளருமான ஆதிமூலம் லட்சுமிபதி, 2020 -21-ஆம் ஆண்டுக்கான இந்திய பத்திரிகைகள் சங்க தலைவராக தற்போது பதவி ஏற்றுக்கொண்டுள்ளார்

Top