logo
 ஈரோடு(பெருந்துறை) அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களின் கல்விக்கட்டணத்தை குறைக்க திருப்பூர் எம்.பி. கோரிக்கை

ஈரோடு(பெருந்துறை) அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களின் கல்விக்கட்டணத்தை குறைக்க திருப்பூர் எம்.பி. கோரிக்கை

08/Feb/2021 08:16:43

ஈரோடு, பிப்:   தமிழகத்தில் உள்ள பிற அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ளதைப் போல குறைத்து உடனடியாக அரசாணை வெளியிடக்கோரி தமிழக முதல்வர் மற்றும் மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் ஆகியோருக்கு திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன்  கோரிக்கை விடுத்துள்ளார்.


இது தொடர்பாக அவர் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு எழுதிய கடித விவரம்: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் கல்விக் கட்டணம் ஆண்டு ஒன்றுக்கு ரூபாய் 13,610 - வீதம் வசூல் செய்யப்படுகிறது. ஆனால், ஈரோடு மாவட்டம், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் மட்டும் தனியார் மருத்துவக் கல்லூரியைப் போல் ஏறத்தாழ ரூ 4,99,000  பல்வேறு கட்டணங்களாக ஆண்டு தோறும் வசூலிக்கப்படுகிறது. இது மாபெரும்  அநீதியாகும். 

                      

எனவே, இக்கோரிக்கையினை வலியுறுத்தி மருத்துவ மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களின் நியாயமான கோரிக்கையை தாங்கள் ஏற்று மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள கட்டணத்தையே நிர்ணயம் செய்து உடனே அரசாணை வெளியிட வேன்டும் என கேட்டுக் கொள்கிறேன்.


மேலும், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கிடைத்துவரும் இடஒதுக்கீடு மற்றும் சலுகைகள் தொடர்ந்து நீடிக்க வேண்டும்; அது எவ்வகையிலும் பாதிக்கக்கூடாது எனவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். மேலும், போராடும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது எனவும் அதில் கேட்டுக் கொண்டுள்ளார்.


Top