19/Mar/2021 05:32:15
புதுக்கோட்டை, மார்ச்: புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் ஆர். திருமேனி தனது வேட்பு மனுவை திருமயம் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரான கிருஷ்ணனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இந்நிகழ்வில்,புதுக்கோட்டை மத்திய மாவட்ட துணைச் செயலாளர் மதர்லேண்ட் ராஜகோபால், மத்திய மாவட்ட வழக்குரைஞர் அணி செயலர் சுரேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.