logo
புதுக்கோட்டை அருள்மிகு  காத்தாயி அம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம்

புதுக்கோட்டை அருள்மிகு காத்தாயி அம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம்

04/Feb/2021 08:57:09

புதுக்கோட்டை, பிப்:   புதுக்கோட்டைமேல 5-ஆம் வீதிலுள்ள  ஸ்ரீ காத்தாயி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது.


புதுக்கோட்டைதிலகர்திடல்  மேல 5-ஆம் வீதிலுள்ள  ஸ்ரீவிநாயகர்  ஸ்ரீகாத்தாயிஅம்மன்ஸ்ரீ அகோர வீரபுத்திரர் ,சன்னாசி ஸ்ரீ சப்த முனீஸ்வரர்  ஆகிய தெய்வங்களுக்கு  மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக  நடைபெற்றது.

 ஆலயத்தில்  கடந்த மாதங்களில் ராஜகோபுரம்,  கோபுரங்களில் பராமரிப்புத் திருப்பணி மேற்கொள்ளப்பட்டது. கோயில் திருப்பணிகள் யாவும் நிறைவுபெற்று கடந்த1-ஆம் தேதி  யாகசாலை பூஜைகள் தொடங்கின. 3.02.2021அன்று காலையில்  சிறப்பு ஹோமம் பூர்ணஹதி  நடைபெற்றது.

பின்னர்,   மேளதாளங்களும் முழங்க, வேதமந்திரங்களும் திருமுறைகளும் ஒலிக்க கலசங்களில் புனித நீரைச் சுமந்துகொண்டு சிவாச்சாரியார்கள் கோபுரங்களின் உச்சியை அடைந்தனர். சுவாமி, அம்பாள் கோபுரங்கள், மற்ற  கோபுரங்களிலும் அமைந்துள்ள கலசங்களில் காலை சரியாக10.30 மணிக்கு புனித நீர் கும்பாபிஷேகம் அரிமளம் எஸ்.ரவி  சிவாச்சாரியார்  தலைமையில் நடைபெற்றது.

அனைத்துக் கோபுரக் கலசங்களிலும் புனித நீர் ஊற்றப்பட்டதை கூடியிருந்த பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.    ஆலயத்திலுள்ள ஸ்ரீவிநாயகர்  ஸ்ரீகாத்தாயிஅம்மன் ஸ்ரீஅகோர வீரபுத்திரர் ,சன்னாசி  ஸ்ரீ சப்தமுனீஸ்வரர்  ஆகிய தெய்வங்களுக்கு   சுவாமிக்கு  பாலபிஷேகம் பன்னீர் பழ வகைகள் பஞ்சாமிர்தம்., இளநீர்,தயிர் சந்தனம்,மஞ்சள் நீர் உள்ளிட்ட அபிஷேகம் கலச அபிஷேகமும் நடைபெற்று  மலர் அலங்காரத்தில்  தீபாராதனை  நடந்தது.

நிகழ்வில்  விழா குழுவினர்கள் பிரமுகர்கள் பொதுமக்கள்  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதையொட்டி நடைபெற்ற அன்னதானத்தில் பொதுமக்கள் அனைவரும்  பங்கேற்றனர்.

Top