logo
புதுக்கோட்டை  சட்டமன்றத் தொகுதிக்கான அதிமுக தேர்தல் பணிக்குழு அலுவலகத்துக்கு பூமி பூஜை

புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கான அதிமுக தேர்தல் பணிக்குழு அலுவலகத்துக்கு பூமி பூஜை

12/Mar/2021 07:49:39

புதுக்கோட்டை, மார்ச்: புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கான அதிமுக தேர்தல் பணிக்குழு அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை பூமி பூஜை நடத்தப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள  6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அனைத்திந்திய அண்ணா திமுக சார்பில்  வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு வீ.ஆர்.கார்த்திக் தொண்டைமான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து புதுக்கோட்டை சட்டமன்ற தேர்தல் பணி குழு அலுவலகத்துக்கான கால்கோள் விழா நடைபெற்றது.

 இந்த விழாவில் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளர்  வீ.ஆர்.கார்த்திக் தொண்டைமான், நகர செயலாளர் க.பாஸ்கர், ஒன்றிய செயலாளர் குமார், சரவணன், முன்னாள் எம்எல்ஏ- ஆர். நெடுஞ்செழியன், முன்னாள் நகர்மன்றத் துணைத் தலைவர் எஸ்.ஏ.எஸ்.சேட் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Top