logo
மோடி ஆட்சியில் தான் சீன ராணுவ வீரர்கள் இந்தியப் பகுதியில் ஆக்கிரமித்துள்ளனர்:  ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மோடி ஆட்சியில் தான் சீன ராணுவ வீரர்கள் இந்தியப் பகுதியில் ஆக்கிரமித்துள்ளனர்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

26/Jan/2021 07:17:11

ஈரோடு, ஜன: ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்  பகுதியில் நடந்த தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பங்கேற்றுராகுல் காந்தி மேலும் பேசியதாவது:

எனக்கும் தமிழ் நாட்டு மக்களுக்கும் இடையேயான உறவு நீண்ட கால உறவு. இது அரசியல் ரீதியான உறவு இல்லை. எனது பாட்டி இந்திரா காந்தி, தந்தை ராஜீவ் காந்தி மீது எந்த அளவுக்கு அன்பு வைத்திருக்கிற ஏனோ அதே அளவு அன்பை தமிழக மக்கள் மீது வைத்துள் ளேன். மோடி ஆகட்டும் பாஜக அரசு ஆகட்டும், அல்லது ஆர்.எஸ்.எஸ் ஆகட்டும் தமிழ் பாரம் பரியம், பண்பாடுக்கு கொடுக்க வேண்டிய மதிப்பை கொடுக்கவில்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆனாலும் தமிழக மக்கள் யாருக்கும் அடிபணிய மாட்டார்கள். 

தமிழக மக்களின் வரலாற்றை மோடி  படித்திருந்தால் இருந்ததால் அது அவருக்கு புரியும். தமிழக மக்கள் அன்புக்கு மட்டுமே கட்டுப்படுவார்கள்.அவர்களுடன் நீங்கள் அன்புடனும் மரியாதையுடனும் பழகினால்  அவர்களும் அன்புடனும் மரியாதையுடனும் பழகுவார்கள்.  இந்த மேடையில் நாம் பல தலைவர்களை ஒன்றாக பார்க்கிறோம்.

அவர்கள் வெவ்வேறு கட்சிகளாக இருந்தாலும் தமிழக மக்களுக்காகவும் கலாசாரத்திற் காகவும்  பாடுபட்டவர்கள். இன்றைய மோடி அரசு ஒரே மொழி, ஒரே மதத்தை புகுத்த பார்க் கிறார்.  தமிழ் மொழியை இரண்டாம் மொழியாக தான் அவர் பார்க்கிறார். அவருக்கு யார்? இந்த அதிகாரத்தை கொடுத்தது. நம்நாடு பன்முகத்தன்மை கொண்ட நாடு. பன்முகத் தன்மைதான் நமது பலம். நமது நாட்டின் கலாசாரம், பண்பாட்டை, பாதுகாக்க வேண்டும்

இன்று தில்லியில் ஆட்சி செய்பவர்களாக  இருக்கட்டும் தமிழகத்தில் ஆட்சி செய்பவர்களாக  இருக்கட்டும் விவசாயத்தை அழித்து விட்டார்கள். முதன் முதலாக தில்லியில் சுதந்திர தினத்தன்று விவசாயிகள் தங்களது உரிமையை காக்க பேரணியாக செல்கிறார்கள். பணமதிப்பு இழப்பு என்பது ஏழை மக்களுக்காகவோ சிறு குறு தொழிலாளர்களுக்காகவோ  கொண்டுவரப்பட்டது இல்லை. ஐந்து பணக்காரர்களுக்காக கொண்டு வரப்பட்டது. பணக் காரர்கள் மேலும் சலுகை பெற்று பணக்காரராக ஆகியுள்ளனர் ஏழைகள் மேலும் ஏழைகளாக உள்ளனர். 

மோடி தனிப்பட்ட 6 பேருக்கு அதுதான் இந்திய அரசை நடத்துகிறார். இந்தியாவில் வேலை வாய்ப்பு திட்டத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தொழிற்சாலைகள் முற்றிலும் கொரோ னாவால்  முடங்கிப் போயுள்ளது. மோடி ஆட்சியில் தான் முதல் முறையாக இந்தியா எல்லைக் குள்  சீனா தனது ராணுவத்தை நிலைநாட்டியது.

ஆயிரக்கணக்கான சீன ராணுவ வீரர்கள் நம்மிடத்தில் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமித்துள் ளனர். ஆனால் இதை மோடி ஏற்க மறுக்கிறார். ஆனால் இதுதான் உண்மையான நிலை. நான் விவசாயிகள் தொழிலாளர்கள் தொழில் முனைவோருக்காக இங்கு வந்துள்ளேன். நம் உறவை வலுப்படுத்த வந்துள்ளேன். நான் தமிழ்நாட்டின் போர் வீரனாக தில்லியில் போராடுவேன் என்றார் ராகுல்காந்தி.

இதில் காங்கிரஸ் எம்பி. சு. திருநாவுக்கரசர், முன்னாள் எம்பி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், மாநில தலைவர் கே.எஸ். அழகிரி, மாவட்ட தலைவர்கள் மக்கள் ஜி. ராஜன், ஈ.பி. ரவி உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Top