logo
டாக்டர் சாந்தா அம்மையார் மறைவுக்கு பிரதமர், முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

டாக்டர் சாந்தா அம்மையார் மறைவுக்கு பிரதமர், முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

19/Jan/2021 06:21:32

புதுக்கோட்டை, ஜன: மருத்துவ சேவைக்காக பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் உள்ளிட்ட உயரிய விருதுகளை பெற்ற சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சாந்தா ( 93)  உடல் நலக்குறைவால் காலமானார்.

புதுக்கோட்டை அரசுமருத்துவமனையில் உள்ள  புற்றுநோய்மையத்தில் மறைந்த  டாக்டர் சாந்தாவின் உருவ படத்திற்கு பணியாளர்கள் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.டாக்டர் சாந்தாவின் மறைவுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

டாக்டர் சாந்தாவின் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.ஏழை, எளிய மக்களுக்கு புற்றுநோய் சிகிச்சை எளிதில் கிடைக்க சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர் சாந்தா ( 93) அரும்பணியாற்றியவர். இவர் புற்றுநோய் குறித்த ஆராய்ச்சி மற்றும் சிகிச்சைக்காக உலகப் புகழ் பெற்ற புற்றுநோய் நிபுணர் ஆவார்.

இருதய நோய் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் டாக்டர் சாந்தா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி(19.1.2021) இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார்.

டாக்டர் சாந்தாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அடையாறு புற்றுநோய் மருத்துவமனை வளாக இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. சாந்தாவின் உடலுக்கு மருத்துவர்களும், மருத்துவமனை ஊழியர்களும் பொதுமக்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். 19.1.2021  மாலை 5 மணிக்கு பெசன்ட்நகர்  மின் மயானத்தில், டாக்டர் சாந்தாவின் உடல் தகனம் செய்யப்பட்டது. அவரின் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மோடி இரங்கல்:டாக்டர் சாந்தா மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.


Top