logo
புதுகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கிங்டவுன் ரோட்டரி சார்பில் ரூ.1.50 லட்சத்தில் உபகரணங்கள் அளிப்பு

புதுகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கிங்டவுன் ரோட்டரி சார்பில் ரூ.1.50 லட்சத்தில் உபகரணங்கள் அளிப்பு

10/Jun/2021 11:21:43

புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை கிங்டவுன் ரோட்டரி சார்பில்  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள  மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில்  சங்கத் தலைவர் கைலாசம்  தலைமையில் நடைபெற்ற  நிகழ்வில்மருத்துவக்கல்லூரி முதல்வர் முதல்வர் பூவதியிடம்  கிங்டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு  2  இசிஜி கருவிகள் மற்றும் 1800 முகக்கவசங்கள்( N 95) வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மருத்துவர் ராஜ் மோகன், கிங்டவுன் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் அசோகன், அண்ணாமலை, வில்சன் ஆனந்த் மற்றும் உறுப்பினர் அசோக், வெங்கட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Top