logo
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் கொரோனா தடுப்பூசி போடும் பணி:  ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் கொரோனா தடுப்பூசி போடும் பணி: ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி

17/Jan/2021 09:09:30

புதுக்கோட்டை-ஜன: புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முன்களப் பணியாளர்களுக்கு  கொரோனா  தடுப்பூசி வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர்  மாவட்ட ஆட்சியர் மேலும் கூறியதாவது: நாடு முழுவதும்  தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் அறிவுரைப்படி தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனடிப்படையில்  புதுக்கோட்டை மாவட்டத்திலும் முதற்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி வழங்கும் பணி தொடங்கியுள்ளது. 

இதில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கலல்லூரி மருத்துவமனையில் 1,270 முன்களப் பணியாளரிகளுக்கு  தடுப்பூ  வழங்கும் போடும் பணிகள்பணி பார்வையிடப்பட்டது.இதே போன்று அறந்தாங்கி மாவட்ட அரசு தலைமை  மருத்துவமனையில் 358 முன்களப் பணியாளர்களுக்கும், ஆலங்குடி அரசு மருத்துவமனையில் 224 முன்களப் பணியாளர்களுக்கும், திருவரங்குளம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 240 முன்களப் பணியாளர்களுக்கும் என புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 இடங்களில் 2,092 முன்களப் பணியாளர்களுக்கு  தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 

இதில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டும் கோவிசீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளும் தனித்தனியே  2  இடங்களில் போடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் முதற்கட்டமாக 10,199 முன்களப்பணியாளர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டு விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு தேவையான 6,900 கோவிசீல்டு தடுப்பூசி மருந்தும் 1,100 கோவேக்சின் தடுப்பூசி மருந்து என ஆக மொத்தம் 8,000 தடுப்பூசி மருந்துகள் பெறப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளதுடன், பல்வேறு கட்டங்களாக ஏற்கெனவே மாதிரி ஒத்திகைகள் பார்க்கப்பட்டுள்ளது.

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் வருகின்ற திங்கட்கிழமை முதல் 75 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 13 அரசு மருத்துவமனைகளிலும் முன்களப்பணியாளர்களுக்கு  தடுப்பூசி போடப்படவுள்ளது. எனவே முன்களப்பணியாளா;கள் அனைவரும் எவ்வித அச்சமின்றி  தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளலாம் என்றார் ஆட்சியர்.


இதில், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி, பொது சுகாதாரத் துணை இயக்குநர் பா.கலைவாணி, அரசு மருத்துவக்கல்லூரி  நிலைய மருத்துவ அலுவலர் எஸ்.இந்திராணி, மருத்துவக் கண்காணிப்பாளர் ராஜ்மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Top