logo
அம்மா மினி கிளினிக் திட்டம் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதம்

அம்மா மினி கிளினிக் திட்டம் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதம்

05/Jan/2021 08:12:31

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி  ஒன்றியம், நமணசமுத்திரத்தில் மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தலைமையில்,  தமிழ்நாடு வீட்டுவசதி வாhpயத்தலைவர் பி.கே.வைரமுத்து முன்னிலையில்  நடைபெற்ற நிகழ்விவ்,  முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கினை  திறந்து வைத்து சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் திறந்து வைத்து பேசியதாவது:

முதலமைச்சரின்  சீரியதிட்டமான அம்மா மினிகிளினிக் திட்டம்  தமிழகம் முழுவதும் தொடார்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அம்மா மினி கிளினிக் திறக்கும் இடங்களில் உள்ள பொதுமக்கள் அரசிற்கு நன்றி கூறுகின்றனர். குக்கிராமங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் இடங்கள் தேர்வு  செய்யப்பட்டு அம்மா மினி கிளினிக் திறக்கப்படுகிறது. 

இந்த மினி கிளினிக்கில் ஒரு மருத்துவர் ஒரு செவிலியர் மற்றும் ஒரு மருத்துவமனை பணியாளர் ஆகியோர் இருப்பர். இத்திட்டத்திற்கு 2000 புதிய மருத்துவப் பணியிடங்கள்  உருவாக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. வரும் வாரத்தில் மருத்துவப் பணியாளர்  தேர்வு வாரியத்தின்  சார்பில் 835 மருத்துவர்கள் நியமனம்செய்யப்படவுள்ளனர். அதனைத் தொடர்ந்து  மேலும் 2,000 புதிய மருத்துவர்கள்     மாதம்  ரூ.60,000  ஊதியத்தில் நியமிக்கப்பட உள்ளனர். இதேபோன்று 2,000 புதிய செவிலியர்கள், 2,000 புதிய உதவியாளர்களும்   நியமிக்கப்படவுள்ளனர். 

கிராமப்புறத்திலுள்ள அம்மா மினி கிளினிக் பெயரில்   மட்டுமே மினிகிளினிக் ஆகும்.  ஆனால் இதில் ஈசிஜி, இரத்தப் பரிசோதனை   உள்ளிட்ட அனைத்துப் பரிசோதனைகள், அவசரகால சிகிச்சைகள், மகப்பேறு சிகிச்சைகள், சாதாரண நோய்களுக்கான சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளை வழங்கும் வகையில் அம்மா மினி கிளினிக் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை கட்டமைத்துள்ளது என்றார் அமைச்சர்  டாக்டர் சி.விஜயபாஸ்கர்..


Top