logo
ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் பரமபதவாசல் திறப்பு:கட்டுப்பாடுகளுடன் தரிசனத்துக்கு  பக்தர்கள் அனுமதி

ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் பரமபதவாசல் திறப்பு:கட்டுப்பாடுகளுடன் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதி

25/Dec/2020 10:10:48

ஈரோடு, டிச: ஈரோடு மாநகர் பகுதியில் பிரசித்தி பெற்ற கோட்டை பெருமாள் கோவில் உள்ளது ஒவ்வொரு வருடமும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பது வழக்கம் ஆனால் இந்த வருடம் கோரோணா தாக்கம் காரணமாக சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதேபோல், சாமி தரிசனத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி வெள்ளிக்கிழமை  அதிகாலை 3 மணி அளவில் நடை திறக்கப்பட்டது பின்னர் பெருமாளுக்கு திருமஞ்சனம் அலங்காரம் தீபாராதனை நடந்தது இதைத்தொடர்ந்து 4:30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அந்த வழியாக பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

 இதன் பின்னர் காலை 6 மணி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டும் பெருமாளை தரிசிக்க அனுமதி அளிக்கப்பட்டது ஆன்லைனில் முன்பதிவு கிடைக்காதவர்களுக்கு கோவிலில் ரூ.100 தரிசனம்  டிக்கெட் பெற்று கொண்டு பெருமாளை தரிசிக்க அனுமதி அளிக்கப்பட்டது. கொரோனா தாக்கம் காரணமாக முக கவசம் அணிந்து வந்த பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப் பட்டனர்.

 அவர்களின் உடல் வெப்பநிலையை அறிந்து கொள்ளும் வகையில் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. பக்தர்கள் தேங்காய் பூ பழம் கொண்டு வர அனுமதிக்கப்படவில்லை மேலும் 65 வயது மேல் உள்ள முதியவர்கள் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கர்ப்பிணி பெண்களும் அனுமதிக்கப்படவில்லை.கூட்ட நெரிசலை தவிர்க்க கோவிலில் தடுப்புஅமைக்கப்பட்டிருந்தது.

எம்எல்ஏ-கே எஸ் தென்னரசு,  மாநகராட்சி ஆணையர் மா. இளங்கோவன், மாவட்ட எஸ்.பி. தங்கதுரை இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் அன்னக்கொடி ,செயல் அலுவலர் ரமணி காந்தன், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர் 


Top