logo
சுற்றுச்சூழல் மாசு அடைவதால் மக்களுக்கு பல்வேறு ஆபத்துகள் காத்திருக்கின்றன

சுற்றுச்சூழல் மாசு அடைவதால் மக்களுக்கு பல்வேறு ஆபத்துகள் காத்திருக்கின்றன

18/Dec/2020 05:58:49

சுற்றுச்சூழல் மாசு அடைவதால் மக்களுக்கு பல்வேறு ஆபத்துகள் காத்திருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளளனர்.

தொழிற்சாலைகள், வேளாண் நிலங்கள், வேளாண் பண்ணைகள், நகர்ப்புறக் கழிவுகள் முதலியவற்றிலிருந்து வெளியேறும் கழிவுப் பொருட்கள் ஆறுகளிலும் வடிகால்களிலும் வேறு நீர்நிலைகளிலும் கலந்துவிடுவதால் நீரின் தரமும் நீர்வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன.  இதனால் புவியின் நீர்வளங்கள் பாதிக்கப்படுகின்றன.

மேலும், வளிமண்டலத்தில் கலக்கும் மாசுகள் மழைநீருடன் கலந்து நிலத்தை அடைகின்றன. இவை நீருடன் நிலத்துக்கு அடியில் சென்று நிலத்தடி நீரையும் ஆறுகள், குளங்கள் முதலியவற்றையும் மாசுபடுத்துகின்றன. எனினும் இவை முன் குறிப்பிட்ட வற்றை விட குறைந்தளவிலேயே பாதிப்பைத் தருகின்றன.

இதற்கும் தொழிற்சாலைக் கழிவுகள் முக்கிய காரணிகளாக இருப்பினும் தற்கால வேளாண்மை முறைகளும் மண்மாசடைதலுக்குப் பெருமளவு பங்களிப்புச் செய்கின்றன எனலாம். வேதியியல் உரங்கள், பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள் முதலியவற்றின் அதிகளவிலான பயன்பாட்டினால் மண் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அணு மின்சார உற்பத்தி, அணு ஆயுத ஆராய்ச்சிகள், அணு ஆயுத உற்பத்தி போன்ற இருபதாம் நூற்றாண்டு நிகழ்வுகளால் கதிரியக்கக் கழிவுகள் உருவாகி சுற்றுச் சூழல் மாசடைகிறது.

ஒலிசார் மாசடைதல் என்பது சாலைகளில் ஏற்படும் வண்டி ஒலி, வண்டி ஒலிப்பான்களால் ஏற்படும் மிகுதியான ஒலி, வானூர்தியின் ஓசை முதலியவற்றால் ஏற்படுகிறது. ஒளி அத்து மீறுகை, அதிகப்படியான ஒளியூட்டம், வானியல்சார் குறுக்கீட்டு விளைவு போன்றவை இவ்வகை மாசில் அடங்கும்.

இவ்வகை மாசுக்கு, தலைக்கு மேலாகச் செல்லும் மின்கம்பிகள், சாலை ஓரங்களில் வைக்கப்படும் பெரிய விளம்பரப் பலகைகள், பாதிக்கப்பட்ட நிலவடிவங்கள், திறந்த வெளிக் குப்பைக் கிடங்குகள், திடக் கழிவுகள், விண்வெளி சிதைவுக் கூளங்கள் போன்றவை எடுத்துக்காட்டுகளாகும்.


Top