logo
கோபி அருகே அரசு  பேருந்து- சரக்கு வாகனம் மோதல்: 8 பேர் படுகாயம் -போக்குவரத்து பாதிப்பு

கோபி அருகே அரசு பேருந்து- சரக்கு வாகனம் மோதல்: 8 பேர் படுகாயம் -போக்குவரத்து பாதிப்பு

27/Jan/2021 07:01:25

ஈரோடு, ஜன:ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் அருகே புதன்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் 8 பேர் பலத்த காயமடைந்தனர். ஈரோடு- மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 சத்தியமங்கலத்தில் இருந்து ஈரோடுக்கு  அரசு பேருந்து புதன்கிழமை சென்று கொண்டிருந் தது. பேருந்தில் 40-க்கும் மேற்பட்டோர்  பயணம் செய்தனர்.  கோபி அருகே உள்ள பொலவக் காளிபாளையம் அருகே  சென்று  கொண்டிருந்த போது எதிரே வந்த சரக்கு வாகனம்  எதிர்பாராத விதமாக   நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.  இதில் சரக்கு வாகனமும் அரசு பேருந்தும்  சேதமடைந்தன.மோதிய வேகத்தில் சரக்கு வாகனம் கவிழ்ந்தது. அதன் மேல் அரசு  பேருந்து  தொங்கிக் கொண்டிருந்தது.

 கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் 5 பெண்கள் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தை அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் பார்த்து  போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் விபத்தில் காயமுற்ற வர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் ஈரோடு- மைசூர் தேசிய நெடுஞ் சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.    

Top