logo
ஈரோட்டில்  இரண்டாம் நிலை காவலருக்கான எழுத்து தேர்வு:3 மையங்களில் நடக்கிறது

ஈரோட்டில் இரண்டாம் நிலை காவலருக்கான எழுத்து தேர்வு:3 மையங்களில் நடக்கிறது

12/Dec/2020 08:14:20

ஈரோடு- டிச: தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் இரண்டாம் நிலை காவலர், சிறை வார்டன், தீயணைப்பு வீரர்களை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வு ஞாயிற்றுக்கிழமை(டிச.13) நடைபெறுகிறது.

 இத்தேர்வு ஈரோடு மாவட்டத்தில் திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி, பெருந்துறை அருகே உள்ள நந்தா என்ஜினியரிங் கல்லூரி மற்றும் கொங்கு பொறியியல் கல்லூரி என மூன்று மையங்களில் நடக்கிறது. தேர்வினை 1,338 பெண்கள், ஒரு திருநங்கை உட்பட மொத்தம் 8,895பேர் எழுத உள்ளனர். 

தேர்வானதுகாலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 12.20மணிக்கு தேர்வு முடியும். 80 நிமிடத்தில் 80 மதிப்பெண்களுக்கான வினாக்கள் கொடுக்கப்பட்டிருக்கும். தேர்வர்கள் காலை 9  மணிக்கே அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையத்திற்கு வர வேண்டும். அவர்கள் கடும் சோதனைக்கு உள்படுத்தப்பட்ட  பின்னரே தேர்வறைக்குள் அனுமதிக்கப்படுவர். இந்த தேர்வு ஈரோடு எஸ்.பி. தங்கதுரை தலைமையில் ஏ.டி.எஸ்.பி., 6 டி.எஸ்.பி.க்கள் என மொத்தம் 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

 மேற்கு மண்டல ஐ.ஜி, பெரியய்யா, சிறப்பு பார்வையாளராக தேர்வு மையங்களை கண்காணிப்பார். இதற்கான ஏற்பாடுகள் 3 மையங்களிலும் தீவிரமாக நடந்து வருகிறது. தேர்வானது அரசு அறிவித்துள்ள கொரோனா  பாதுகாப்பு வழி முறையில் நடைபெற உள்ளது. தேர்வர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வரவேண்டும், தேர்வர்களின் உடல் வெப்ப நிலையை பரிசோதிக்கும்  வகையில் தெர்மல் ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்யப்பட உள்ளது. சமூக இடைவெளியை விட்டு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது.

Top