05/Oct/2020 05:21:22
புதுக்கோட்டை அருகேயுள்ள இடையத்தூரில் மரம் அறக்கட்டளை சார்பில் வள்ளலார் பிறந்ததின விழா இன்று கொண்டாடப்பட்டது.
ஊராட்சிஒன்றிய நடுநிலைப்பள்ளியில் விழாவுக்கு மரம் அறக்கட்டளை நிர்வாகி மரம் ராஜா தலைமை வகித்தார். இடையத்தூர் ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் வள்ளலார் படத்தைத் திறந்து மாலை அணிவித்து மரக்கன்றுகள் வழங்கி வள்ளலாரின் சிறப்புகள் பற்றி பேசினார்.
ஆசிரியர் சரவணபெருமாள், குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பள்ளியில் சிறப்பாக பணியாற்றி மறைந்த ஆசிரியர் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் ராஜாசந்திரன் படத்துக்கு நிர்வாகி குமரேசன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில், வார்டு உறுப்பினர் தாமரைக்கண்ணன், செல்வபாண்டியன், மலைக்கொழுந்து,மலையாண்டி, பாண்டியன் மற்றும் மாணவர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிர்வாகி சத்தியமூர்த்தி வரவேற்றார் .நிறைவாக தீபக் நன்றி கூறினார்