logo
நைஜீரியா நாட்டில் 110 விவசாயிகள் ஒரே நேரத்தில் கழுத்தை அறுத்து படுகொலை

நைஜீரியா நாட்டில் 110 விவசாயிகள் ஒரே நேரத்தில் கழுத்தை அறுத்து படுகொலை

03/Dec/2020 12:27:49

நைஜீரியா: நைஜீரியா நாட்டில் வயலில் இறங்கி வேலை செய்து கொண்டிருந்த 110 விவசாயிகளை கழுத்தை அறுத்து படுகொலை செய்திருக்கிறார்கள் தீவிரவாதிகள். இந்த சம்பவம் இந்த நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நைஜீரியாவின் தலை நகர் மைடு குரியில் இருக்கும் கோசாப் கிராமத்தில் விவசாயிகளில் பலர் வயலில் இறங்கி வேலை செய்து கொண்டிருந்தார்கள். அப்போது அந்த இடத்தை சுற்றி வளைத்த போகோஹரம் என்கிற தீவிரவாதிகள் தங்களின் கையில் கிடைத்த விவசாயிகளை கழுத்தை அறுத்து படுகொலை செய்திருக்கிறார்கள்.

இதில் 110 விவசாயிகள் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.இறந்த 110 விவசாயிகளின் உடல்களையும் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு இருக் கிறது.இது மட்டுமில்லாமல் நிறைய பெண்களை தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர்.மேலும் பல விவசாயிகள் படுகாயத்துடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இவர்கள் அனைவருமே புலம்பெயர் தொழிலாளர்கள். இந்த வருடத்தில் மட்டும் நைஜீரியாவில் நடந்த பயங்கரமான தாக்குதல்களில் இது மிகக் கொடூரமானதாக பார்க்கப்படுகிறது என ஐநா அமைப்பின் குடியிருப்பு மற்றும் மனிதநேய ஒருங்கிணைப்பாளரான எட்வர்டு கெல்லன் என்பவர் கருத்து தெரிவித்துள்ளார்.



Top