logo
ஈரோடு வீரப்பன்சத்திரம் விசைத்தறி நெசவாளர் சங்கத்தின் புதிய ஷோரூம் திறப்பு

ஈரோடு வீரப்பன்சத்திரம் விசைத்தறி நெசவாளர் சங்கத்தின் புதிய ஷோரூம் திறப்பு

11/Nov/2020 04:31:14

ஈரோடு, வீரப்பன்சத்திரம் தொடக்க விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தின் சார்பில்  அமைக்கப்பட்டுள்ள புதிய ஷோரூம் திறப்பு விழா இன்று(11.11.2020) நடந்தது.

 ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. கே.எஸ். தென்னரசு தலைமையில், சங்கத்தின் தலைவர். கே. நல்லசாமி முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில், ஈரோடு மேற்கு தொகுதி எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான கே.வி. ராமலிங்கம் திறந்து வைத்தார். 

 சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த புதிய ஷோரூமில்  சங்கத்தின் உறுப்பினர்கள் தயாரித்த பருத்தி வேட்டி,  சட்டை போன்றவைகள் முதல் கட்டமாக உற்பத்தி விலைக்கே இங்கு விற்பனை செய்யப்படுகிறது. முதல் விற்பனையை கைத்தறி மற்றும் துணிநூல்துறை உதவி இயக்குநர் சரவணன் தொடங்கி வைத்தார். 

 இதுகுறித்து சங்கத்தலைவர். கே.நல்லசாமி கூறுகையில், வீரப்பன்சத்திரம் சங்கம் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதி நெசவாளர்களுக்கு வேலை வாய்ப்பை அளித்து வருகிறது. 500 உறுப்பினர்கள் கொண்ட இச்சங்கத்தில் கூடுதலாக தற்போது 300 உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். அரசின் விலையில்லா வேட்டி சேலை உற்பத்தி செய்வது சங்கத்தில் முக்கியமான பணியாகும். கடந்த ஆண்டு 5 ½ லட்சம் வேட்டி மற்றும் 5 ½ லட்சம் சேலைகள் உற்பத்தி செய்ய அரசு உத்தரவு பெறப்பட்டுள்ளது. 

ஆண்டு முழுவதும் நெசவாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் புதிதாக இந்த ஷோரூம் துவங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நெசவாளர்கள் தங்கள் சொந்த தறி மூலம் வேட்டி, சேலை, சுடிதார், சட்டை போன்றவைகள் தயாரித்து இந்த ஷோரூம் மூலம் மொத்த மற்றும் விற்பனை சில்லறை வர்த்தகம் அடக்க விலைக்கே செய்ய முடியும். இந்த ஷோரூம் நெசவாளர் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் துவக்கப்பட்டுள்ளது. மேலும் மூலதனமாக சுமார் 300 உறுப்பினர்கள் தலா ரூ.5,100- செலுத்தியுள்ளனர். 

இந்த ஷோரூமின் லாபம் அனைத்து உறுப்பினர்களுக்கும் கிடைக்கும். சங்கத்தின் அடுத்த நடவடிக்கையாக இந்த உறுப்பினர்களின் சட்டை, புடவை வேட்டி போன்ற பொருட்களை இதர வர்த்தகர்கள் மூலமும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் வரும் ஆண்டுகளில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும் எண்ணியுள்ளோம்.

இச்சங்கத்திற்கு கடந்த சில ஆண்டுகளாக சுமார் ரூ.40 லட்சம் வரை நஷ்டத்தில் இருந்தது. அந்த நஷ்டம் எல்லாம் சரி செய்யப்பட்டு கடந்த நிதியாண்டில் ரூ.12 லட்சம் லாபம் கிடைத்துள்ளது.அதில் 50 சதம் உறுப்பினர்களுக்கு தீபாவளி போனஸாக வழங்கப்பட்டது. குறைந்த விலைக்கே தரமான ஜவுளி பொருட்களை இச்சங்கம் விற்பனை செய்வதால் பொதுமக்கள் ஆதரவளித்து கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என்று அவர்   கூறினார்.

இதில்,சங்கத்துணைத்தலைவர். ஆர்.சண்முகம், இயக்குநர்கள். ஆர். மனோகரன், எஸ். தர்மலிங்கம், எஸ். சம்பூர்ணம், ஈ.சண்முகபிரியா, ஜி.சுப்பிரமணியம் மற்றும் ஈரோடு ஒன்றிய செயலாளர். பூவேந்திரகுமார், மாவட்ட ஆவின் துணைத்தலைவர். மேட்டுக்கடை குணசேகரன், ஈரோடு மாநகர் பகுதிக்கழகச் செயலாளர்கள். கே.சி. பழனிச்சாமி, பெரியார் நகர் மனோகரன், கேசவமூர்த்தி, சூரம்பட்டி ஜெகதீசன், முருகசேகர், முனுசாமி (எ) ஜெயராஜ், கோவிந்தராசர்.

தங்கமுத்து, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர். பாலாஜி, மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர். சின்னச்சாமி, மாவட்ட மாணவரணிச் செயலாளர். ரத்தின் பிரித்திவி, மாவட்ட கழக துணைச் செயலாளர். ஜெயலட்சுமி மோகன், மாவட்ட இணைச் செயலாளர். பாப்பாத்தி மணி, ஒன்றிய நெசவாளர் பிரிவுச் செயலாளர். பழனிச்சாமி, மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர்கள். பாவை அருணாச்சலம், சோழா லோகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 


Top