logo
புதுச்சேரி அரசின் சிறந்த திரைப்படத்துக்கான விருதுக்கு  ஆர். பார்த்திபன் இயக்கிய ஒத்த செருப்பு  படம் தேர்வு

புதுச்சேரி அரசின் சிறந்த திரைப்படத்துக்கான விருதுக்கு ஆர். பார்த்திபன் இயக்கிய ஒத்த செருப்பு படம் தேர்வு

03/Dec/2020 11:21:21

புதுச்சேரி: ஆர். பார்த்தியான் நடித்து இயக்கியுள்ள படம் ஒத்த செருப்பு. இப்படத்துக்கான இசையை சந்தோஷ்நாராயணனும், ஒளிப்பதிவை ராம்ஜியும் செய்துள்ளனர். கடந்த வருடம் வெளியான இப்படத்தில் பார்த்திபன் மட்டுமே ஒற்றைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

புதுச்சேரி செய்தி விளம்பரத் துறையும் நவதர்ஷன் திரைப்படக் கழகமும் மத்திய அரசு திரைப்பட விழா இயக்ககத்துடன் இணைந்து இந்தியன் பனோரமா திரைப்பட விழாவை புதுச்சேரியில் நடத்துகின்றன. டிசம்பர் 15 அன்று  நடைபெறும் இந்த விழாவில்    சிறந்த திரைப்படத்துக்கான விருது ஒத்த செருப்பு  படத்தை இயக்கி நடித்த ஆர். பார்த்திபனுக்கு வழங்கப்படவுள்ளது. மேலும் ரூ.1 லட்சம் பரிசுத்தொகையுடன் புதுவை அரசின் சங்கரதாஸ் சுவாமிகள்  விருதும் பார்த்திபனுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 


Top