16/Oct/2020 08:21:39
ஈரோடு: எஸ்.சி. எஸ்.டி.ஓ.பி.சி. பிரிவு இட ஒதுக்கீடுக்கு எதிரான மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிழக்கு மாவட்ட செயலாளர் பாஸ்கர் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன் முன்னிலை வகித்தார். தெற்கு மாவட்டச் செயலாளர் அம்பேத்கர், தெற்கு மாவட்ட பொருளாளர் விஜயபாலன், அரசாங்கம், தொகுதி செயலர்கள் அரங்க முதல்வன், பொன்தம்பிராஜன், மதிவாணன்,சண்முகம்.
இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாவட்ட அமைப்பாளர் ஜாபர்அலி, ரஞ்சித்,ஆனந்தன், பால்ராஜ், அக்பர்அலி உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். எஸ்.சி. எஸ்.டி. ஓ.பி.சி இட ஒதுக்கீடுக்கு எதிரான மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி முழக்கமிட்டனர்.