logo
பொது சுகாதாரத்துறை-சிவிபி-அறநிலையம் இணைந்து நடத்திய சிறப்பு முகாமில் 7,163 பேருக்கு கண் பரிசோதனை: 2,620 பேருக்கு இலவச கண்ணாடி: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

பொது சுகாதாரத்துறை-சிவிபி-அறநிலையம் இணைந்து நடத்திய சிறப்பு முகாமில் 7,163 பேருக்கு கண் பரிசோதனை: 2,620 பேருக்கு இலவச கண்ணாடி: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

02/Dec/2020 12:18:31

புதுக்கோட்டை:  புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர்; மற்றும் அன்னவாசல் பேரூராட்சிகளில் பொது சுகாதாரத்துறை மற்றும் சிவிபி அறநிலையம் சார்பில் நடத்தப்பட்ட கண் பரிசோதனைக்கான ஒளிமயமான வாழ்வு முகாமைத் தொடக்கி வைத்த அவர் மேலும் பேசியதாவது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் குறிப்பாக கிராமப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு கண் குறைபாடுகளை சரிசெய்யும் வகையில் கண் பரிசோதனைக்கான ஒளிமயமான வாழ்வு முகாம்கள் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இலுப்பூர் மற்றும் அன்னவாசல் பேரூராட்சிகளில் உள்ள பொது மக்கள் பயன்பெறும் வகையில் கண் பரிசோதனைக்கான ஒளிமயமான வாழ்வு முகாம்  நடத்தப்பட்டது.

இம்முகாமில் பொதுமக்கள் தங்கள் கண் குறைபாடு தொடா;பான அனைத்து பரிசோதனைகளையும் மேற்கொள்வதுடன் கண் கண்ணாடி தேவைப்படும் அனைத்த நபர்களுக்கும் சிவிபி  அறநிலையம் சார்பில் விலையில்லாமல் கண்கண்ணாடிகள் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் அறுவை சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கும் அறுவை சிகிச்சை செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த முகாம்கள் மூலம்  இதுவரை 7,163  பேருக்கு  கண் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்களில் கண் பார்வை தெளிவுக்கு கண்ணாடி தேவைப்பட்ட 2,620 பேருக்கு  சிவிபி அறநிலையம் சார்பில் கண்கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்படும்.

மேலும் இம்முகாமில் கலந்து கொண்டவர்களில் 806 பேருக்கு  அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தை கண்பார்வை குறைபாடு இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும் என்பதே இது போன்ற முகாம்களின் நோக்கம் என்றார் அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர்.

இம்முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், பொது சுகாதாரத் துணை இயக்குநர் பா.கலைவாணி,  சிவிபி அறநிலையத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Top