logo
கந்தர்வகோட்டையில் மார்க்சிஸ்ட்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினப் பிருந்தாகாரத் தேர்தல் பிரசாரம்

கந்தர்வகோட்டையில் மார்க்சிஸ்ட்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினப் பிருந்தாகாரத் தேர்தல் பிரசாரம்

01/Mar/2021 11:19:43

புதுக்கோட்டை, பிப்: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத் பங்கேற்று பேசினார்.

கந்தர்வகோட்டை வெள்ளைமுனியன் கோவில் திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் வி.ரெத்தினவேல் தலைமை வகித்தார். பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத் சிறப்புரையாற்றினார். 

அவர் ஆற்றிய உரை:


மே 2-ஆம் தேதி வரை என்ன முடிவு வரப்போகிறு என்பதை அறிய காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த அரசு என்பது, அதிமுக ரசு என்பது தமிழக மக்களின் நலனுக்காக செயல்படவில்லை. பாஜக அரசுக்கு சாதகமாக செயல்படும் அரசு. இந்த அரசை தூக்கி எறி வேண்டும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்.


2 மாதங்களுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தை தாக்கிய நிவர் புயலால் பயிர் அழிந்தது. மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். இதற்குப் பிறகு, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல்வேறு போராட்டங்களின் வாயிலாக வலியுறுத்தியது. ஆனால், 20 சதவீதம் அளவுக்குக்கூட அரசு நிவாரணமாக வழங்கவில்லை.


கஜா புயலுக்கு முழுமையாக பாதிக்கப்பட்டன. மக்கள் வாழ்வாதாரத்தை இழந்தார்கள். அப்போது, இங்கு பிரதமர் வந்தாரா?. அப்போது, கோவைக்கு சக்கி தேவ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மோடி சென்றார். ஆனால், இங்கு வரவில்லை.

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்க கோரி டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிளுக்கான அரசு என்று கூறும் பாஜகவினர், இந்த சட்டங்களை ஏன் ரத்து செய்யவில்லை?.


இதைப் பற்றி தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை. ஆனால், இந்தியாவில் முதல் மாநிலமாக கேரளா அரசு வேளாண் சட்டங்ளுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தது.திமுக அரசானது வாயில் பூட்டு போட்டுக்கொண்டு உள்ளது. மாநிலத்தில் என்ன நடந்தாலும் இந்த பூட்டை திறப்பதாக இல்லை.


அதிமுக அரசானது தமிழகத்தினுடைய உரிமைகளை பாதுகாக்கின்ற அரசாக இல்லாமல், மாநில, மொழி, மக்கள் உரிமை, எத்தகைய பிரச்சினையாகஇருந்தாலும் பாஜகவிடம் சரனாகதி அடையும் அரசாக்ததான் உள்ளது.நிலவுக்கு செல்வதாக பிரதமர் கூறுகிறார். ஆனால், இந்திய மக்கள் இரு சக்கர வாகனத்தில்பெட்ரோலுக்குககூட காசுஇல்லாமல் நடந்து செல்கின்றனர்ர.


இந்த விலை உயர்வினால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் பன் மடங்கு உயர்ந்து வருகிறது. பாகிஸ்தானில் பெட்ரோல் லிட்டர் ரூ.52க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று, இலங்கை, பங்களாதேஷ் போன்ற அண்டை நாடுகளில் இந்தியாவைவிட விலை குறைவாகத்தான் உள்ளது. அந்த நாடுகளிலும் கச்சா எண்ணையை இறக்குமதிதான் செய்கின்றனர்.


கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீது விலையை உயர்த்தி வருகிறது. மொத்த விலையில் 67 சதவீதம் வரியை மத்திய அரசால் போடப்படுகிறது. மூன்றில் 2 மடங்கை மத்திய அரசுதான் போடுகிறது.கடந்த 5 ஆண்டுகளில் வரியின் சுமார்ரூ.4 லட்சம் கோடி கூடுதலாக மத்திய அரசு கொள்ளை அடித்துள்ளது. இது ஒரு பெரிய வழிப்பறியாகும். இதற்கு அதிமுக அரசு துணை போகிறது.கடந்த ஒரு ஆண்டாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி எந்த உதவியையும் செய்யவில்லை. தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட தொழிலாளர்களுக்கு நிவாரணம்கூட அரசு கொடுக்கவில்லை.


தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் குறைந்தபட்சம் 100 நாட்கள் வேலை கொடுக்க வேண்டும் என்பது சட்டம். ஆனால், தமிழகத்தில் 42 நாட்கள்தான் வேலை கொடுக்கப்பட்டது. தமிழகத்தில் தினக்கூலியாக வழங்கப்பட வேண்டிய ரூ.256-க்குப் பதிலாக  ரூ.191தான் கொடுக்கப்படுகிறது. ஆதையும்கூட மாதக்கணக்கில் நிலுவையில் அரசு வைத்துள்ளது. கூலி இல்லாமல் வேலை செய்கின்ற அடிமையாக மாற்ற நினைக்கிறார்கள். இதை நாம் அனுமதிக்க விடக்கூடாது.பெரு நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாயை கொடுத்துள்ளார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். ஆனால், முதியோர் உதவித் தொகையில் எந்த மாற்றமும் இல்லை.


இந்த அரசை மாற்று அளவுக்கு நமக்கு வலிமை உள்ளது. வெறுப்பின் தூதுவர்களாக டெல்லியில் இருந்து தமிழகத்துக்கு பாஜகவினர் வந்துகொண்டு இருக்கிறார்கள். நம்மை மதம், ஜாதியால் பிளவு படுத்த பார்க்கிறரார்கள். அதற்கு நாம் இறையாகாமல், ஒற்றுமையோடு இருந்தால் இந்த அரசை தோற்கடிக்க முடியும்.தமிழ் மொழி, பாரம்பரியத்தின் மீது எந்த ஒரு தாக்குதலையும் நடத்த முடியாது என்பதை இந்த தேர்தல் மூலம் தமிழக மக்கள் நிரூபிக்க வேண்டும். தேர்தலில் இடதுசாரி இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என்றார் பிருந்தாகாரத்.

மக்களுக்கான கோரிக்கைகளை விளக்கி மாநிலக்குழு உறுப்பினர்கள் ஐ.வி.நாகராஜன், ஜி.நீலமேகம், எம்.சின்னதுரை, மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் க.செல்வராஜ், ஏ.ராமையன் ஜனநாயக மாதர்சங்க மாநில செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி, மாவட்டச் செயலாளர் டி.சலோமி ஆகியோர் பேசினர்.

பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் என்.சீனிவாசன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சங்கர், எஸ்.பொன்னுச்சாமி, என்.பொன்னி, ஏ.ஸ்ரீதர், கே.சண்முகம், வி.துரைச்சந்திரன், சி.சுப்பிரமணியன், சி.அன்புமணவாளன், ஜி.நாகராஜன், த.அன்பழகன்.

ஒன்றியச் செயலாளார்கள் கே.தங்கவேல், எம்.பாலசுந்தரமூர்த்தி, தென்றல் கருப்பையா, சி.ஜீவானந்தம், எம்.ஆர்.சுப்பையா, எல்.வடிவேல், நெருப்பு முருகேஷ், சி.அடைக்கலசாமி, டி.லட்சாதிபதி, சா.தோ.அருணோதயன், கரு.ராமநாதன், என்.பக்கருதீன், தரணிமுத்துக் குமார் உள்ளிட்ட 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர். பொதுக்கூட்டத்தில் ஆலங்குடி விழுதுகள் குழுவினரின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

Top