19/Jun/2021 02:15:20
சென்னை, ஜூன்: தமிழக முதலமைச்சருடன் நபார்டு வங்கியின் தலைவர் நேரில் சந்தித்து தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை (19.6.2021 தலைமைச் செயலகத்தில், நபார்டு வங்கியின் தலை டாக்டர் ஜி.ஆர். சிந்தாலா நேரில் சந்தித்து, தமிழ்நாட்டில் நபார்டு வங்கியின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்து பேசினார்.
இச்சந்திப்பின்போது, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகாஜன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், அரசு மற்றும் நபார்டு வங்கியின் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.