21/Nov/2020 08:36:09
புவனேஸ்வர்: ஒடிசாவில் தலைக்கவசம் அணியா மல் வாகனம் ஓட்டினால் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் ஹெல்மெட் கட்டாயம் என்ற விதி நடைமுறையில் இருந்தாலும் கூட பலரும் அதனை பின்பற்றுவதில்லை. இதனால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகளும் அதிகம் ஏற்படுகின்றன. இந்நிலையில் ஒடிசா அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி அனைவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம். அப்படி அணியவில்லை என்றால் அபராதம் கிடையாது. மாறாக, டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவில் நடக்கும் விபத்துகளில் பெரும்பாலான உயிரிழப்புகள் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவதால் ஏற்படுகிறது. இதைத் தடுக்க ஒடிசாவில் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் 3 மாதங்களுக்கு ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.