logo
தீபாவளி  பண்டிகையை முன்னிட்டு  ஆவின் நிறுவனங்களில்  இனிப்பு வகைகள்  விற்பனை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் நிறுவனங்களில் இனிப்பு வகைகள் விற்பனை

13/Nov/2020 06:41:41

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட பால் உற்பத்தியாளா; கூட்டுறவு ஒன்றிய பொது மேலாளர் டாக்டர் பி.பாலபூபதி வெளியிட்ட  தகவல்:

புதுக்கோட்டை மாவட்ட ஆவின் நிறுவனத்தின் சாh;பில் தீபாவளி  பண்டிகையினை முன்னிட்டு  சுவைமிகுந்த சிறப்பு இனிப்பு வகைகள் விற்பனை செய்யப்படுகிறது. தமிழக அரசின் வழிகாட்டுதலுக்கு இணங்க, தரம் ஒன்றே குறிக்கோளாக கொண்டு பால் மற்றும் பால் பொருட்களை நுகர்வோர்களுக்கு நியாயமான விலையில் வழங்கி, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேல் பால் விற்பனையில் தமிழகத்தின் முன்னோடியாக ஆவின் நிறுவனம் திகழ்ந்து வருகிறது. 

மேலும், பால் உப பொருட்களான வெண்ணெய், நெய், தயிர், பால்கோவா, மைசூர்பாகு, குலாப்ஜாமுன், ரசகுல்லா, லஸ்ஸி, நோய் எதிர்ப்பு சக்தி மோர், சாக்லேட், ஐஸ் கிரீம் முதலான பால் பொருட்களையும் உயரிய தரத்தில், தகுந்த சூழ்நிலையில், தேவையான சர்க்கரை அளவுடன் தயாரித்து ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனை யாளர்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது.  அத்துடன் கால சூழ்நிலைக் கேற்றவாறு நுகர்வோர்களின் தேவைக்கேற்ப நோய் எதிர்ப்புத் தன்மையினை கூட்டும் புதிய பால் உப பொருட்களை அவ்வப்போது ஆவின் நிறுவனம் அறிமுகப்படுத்தி விற்பனை  செய்து வருகிறது. 

அந்த வகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு இனிப்புகளான ஸ்டப்டு டிரை ஜாமுன் 250 கி -ரூ.190-க்கும்,  நட்டி மில்க் கேக் 250 கி-ரூ.190-க்கும்,  ஸ்டப்டு மோதி பாக் 250 கி -ரூ.170-க்கும்,  காஜு பிஸ்தா ரோல் 250 கி-ரூ.225-க்கும்  பிளேவர்டு மில்க் பர்பி 250 கி -ரூ.165-க்கும் மற்றும் மேற்கண்ட 5 வகையான  இனிப்புகள் அடங்கிய  500 கி-ரூ.375-க்கும்   விற்பனை செய்யப்படுகிறது..

 இவை அனைத்தும் சுகாதாரமான முறையில் ஆவினின் அக்மார்க் தரம் பெற்ற நெய்யினால் தயாரிக்கப்பட்ட இனிப்புகளாகும். சிறப்பு விலையில் விற்கப்படும் தரமான, சுவைமிகுந்த, இந்த இனிப்பு வகைகளை  பொதுமக்கள் ஆவின் பார்லர்கள் மற்றும் ஆவின் சில்லரை விற்பனையாளர்களிடமிருந்து வாங்கி பயன்பெறலாம். 

மேலும் 7373780224, 7373780225 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை உங்களுக்கு தேவையான ஆர்டர்களை தெரிவிக்கலாம்.

  அரசு துறை அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், அரசு ஊழியர்கள், கூட்டுறவு நிறுவனங்கள், மற்றும் பிற நிறுவனங்கள் தங்களுக்கோ தங்களின் ஊழியர்களுக்கோ தேவையான தரமான முறையில் தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகளை புதுக்கோட்டை ஒன்றியத்தில் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம்.

Top