logo
சிகரெட் பழக்கத்தால் ஒரே ஆண்டில் இந்தியாவில் 10 லட்சம் பேர் பலி

சிகரெட் பழக்கத்தால் ஒரே ஆண்டில் இந்தியாவில் 10 லட்சம் பேர் பலி

20/Nov/2020 06:48:57

புதுதில்லி:சிகரெட் பழக்கத்தால் ஒரே ஆண்டில் இந்தியாவில் மட்டும் 9 லட்சத்து 32 ஆயிரத்து 711 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள்.

இங்கிலாந்தை சேர்ந்த பொது சுகாதார ஆய்வு நிறுவனம் ஒன்று உலக சுகாதார அமைப்பின் தரவுகளை அடிப்படையாக வைத்து உலகம் முழுவதும் நடத்திய ஆய்வு முடிவில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.நாடு முழுவதும் சுமார் 12 கோடி பேர் புகை மற்றும் புகையிலை பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள். அவர்களில் 75 சதவீதம் பேர் புகைப்பழக்கத்துக்கு அடிமைகளாகவே மாறி விட்டார்கள்.

உலக அளவில் நிகழும் சிறு வயது மரணங்களுக்கு முக்கிய காரணமாக இருப்பது புகை பழக்கமாகவே உள்ளது. மலேரியா, காசநோய் ஆகியவற்றால் ஏற்படும் மரணங்களைவிட 3 மடங்கு அதிகமாக புகையிலை பழக்கத்தால் ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது. புகை பழக்கத்தை கட்டுப்படுத்தினால் 50 சதவீதம் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் தடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Top