logo
இந்திய மருத்துவ கழகம் சார்பில் புதுகை மருத்துவருக்கு  விருது

இந்திய மருத்துவ கழகம் சார்பில் புதுகை மருத்துவருக்கு விருது

24/Nov/2020 10:43:54

புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகரில் கொரோனா என்ற கொடிய தொற்றுநோய் பரவலை தடுக்கஇ தாக்கத்தை குறைக்கஇ  இக்கட்டான இந்த அபாயமான சூழ்நிலையில் நாம் நமது  ஒத்துழைப்பையும் ஆதரவையும்  நம் சமூகத்திற்கும் அரசுக்கும் கொடுக்கும் பொருட்டுஇ சுகாதார துறை அமைச்சரின் வழிகாட்டுதலின் படி, மாவட்ட ஆட்சியர் ஆணைக்கிணங்க, பொது சுகாதார துறையுடன் இணைந்து இந்திய மருத்துவ கழகம் புதுக்கோட்டை கிளை சார்பாக காய்ச்சல் மருத்துவ முகாம்கள் நகரின் பல்வேறு பகுதியில் 17-7-2020 முதல் 3-10-2020 வரை தொடரந்து இடைவிடாது 79 நாட்களாக 232 இடங்களில் காய்ச்சல் முகாம் நடைபெற்றது.

முகாமில் கலந்து கொண்டவர்கள் 12,717 பேர், காய்ச்சல் கண்டயரியப்பட்டவர்கள் 190 பேர்.  இம்முகாமிற்கு ஒத்துழைப்பு கொடுத்த செயலாளர் மருத்துவர் நவரத்தினசாமி, பொருளாளர் மருத்துவர் ராஜா மற்றும் நிர்வாகிகளுக்கும்,  காய்ச்சல் முகாம்களில் கலந்து கொண்டு தன்னலமற்ற சேவை ஆற்றிய மருத்துவர்கள் சாரதாமணி, அகமது மர்சூக், கோபாலகிருஷ்ணன், ஹரிராம், முகாமில் பங்கு கொண்ட மருத்துவமனைகளான டீம், மணிமேகலை, மாமலர், முத்துமீனாட்சி, பீவெல் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் அனைவருக்கும்  மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் இந்திய மருத்துவக்கழகம்  சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.

 இந்திய மருத்துவ கழகம் தமிழ்நாடு கிளை சார்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈரோட்டில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் கொரோனோ தடுப்பு நடவடிக்கைகளை பாராட்டி புதுக்கோட்டை கிளையின் தலைவர் மருத்துவர் கே.எச்.சலீம் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.  இதில் மாநிலத்தலைவர் மருத்துவர் ராஜா, அகில இந்தியத்தலைவர் தேர்வு மருத்துவர் ஜெயலால், மாநிலத்தலைவர் தேர்வு மருத்துவர் பழனிசாமி ஆகியோர் விருது வழங்கினர்.

 இது குறித்து, மாவட்டத் தலைவர் மருத்துவர் கே.ஹெச். சலீம் கூறியவதாவது, மருத்துவ பணி செய்து கொரானோ நோயால் பாதிக்கப்பட்டு, குணமாகி மீண்டு வந்த மருத்துவர்களுக்கும், உயிர் தியாகம் செய்த மருத்துவர் முஜிபுர் ரஹ்மான் அவர்களுக்கும் இவ்விருதுகளை சமர்பிக்கிறோம் என கூறினார். 


Top