logo

வங்கியில் பணம் எடுத்தாலும் கட்டணம், போட்டாலும் கட்டணம்.. முடிவுக்கு வந்தது இலவச சேவை

03/Nov/2020 07:33:27

பாங்க் ஆப் பரோடா  வங்கியில் பணத்தை டெபாசிட் செய்யவும், பணத்தை திரும்பப் பெறுவதற்கு அளிக்கப்பட்டு வந்த இலவச சேவை முடிவுக்கு வந்துள்ளது. நவம்பர் 1 முதல், வங்கியில் இந்த இரண்டு சேவைகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

பாங்க் ஆப் இந்தியாவைத் தொடர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB), ஆக்சிஸ் வங்கி (Axis Bank) மற்றும் சென்ட்ரல் வங்கி (Central Bank) ஆகியவையும் விரைவில் இதேபோல் பணம் போட்டாலும் கட்டணம், எடுத்தாலும் கட்டணம் என்ற முடிவை எடுக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எனினும், வங்கிகள் குறிப்பிட்ட அளவு பணம் எடுத்தல் சேவையை இலவசமாக வழங்கும் , அதேபோல் பணம் கட்டும் சேவையையும் இலவமாக வழங்கும். ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் போனால் மட்டுமே கட்டணம் வசூலிக்க வாய்ப்பு உள்ளது.

தீபாவளி போனஸ்.. போக்குவரத்து கழகம், ரேஷன் கடை ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு.. தமிழக அரசு அதிரடி

தற்போதைய நிலையில் பேங்க் அப் பரோடா மட்டும் பணத்தை டெபாசிட் செய்யவும், பணத்தை திரும்பப் பெறுவதற்கு நவம்பர் 1 முதல் கட்டணம் வசூலிக்க தொடங்கி உள்ளது. எந்த கணக்குகளுக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும் என்பதை இப்போது பார்ப்போம்.

நடப்பு கணக்கு கட்டணம்: நடப்புக் கணக்கு (Current account), பணக்கடன் வரம்பு (Cash Credit Limit ) மற்றும் ஓவர் டிராப்ட் கணக்கில் (Overdraft Account) பணத்தை டெபாசிட் செய்வதற்கும் திரும்பப் பெறுவதற்கும் பாங்க் ஆப் பரோடா கட்டணங்கள் பட்டியலை உருவாக்கி உள்ளது. சேமிப்பு வங்கி கணக்கில் (Savings Bank account) உள்ள பணத்தை திரும்பப் பெறுவதற்கான தனி கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

பணம் எடுக்க 40 ரூபாய் கட்டணம்: இனி ஒவ்வொரு முறையும் வாடிக்கையாளர் ஒரு மாதத்துக்கு மூன்று முறை மட்டுமே வங்கி கணக்கில் இருந்து பணத்தை இலவசமாக எடுக்கலாம். அதற்கு மேல் எடுத்தால் ஜிஎஸ்டியுடன் ரூ.150 கட்டணம் செலுத்த வேண்டும். சேமிப்பு கணக்கு (Savings Account) வாடிக்கையாளர்கள் மூன்று முறை வரை பணத்தை இலவசமாக டெபாசிட் செய்யலாம்.

ஆனால், நான்காவது முறையாக கணக்கில் டெபாசிட் செய்தால், 40 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். ஜன் தன் கணக்கு (Jan Dhan Account) வைத்திருப்பவர்கள் மட்டும் பணத்தை டெபாசிட் செய்வதற்கு எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை. ஆனால் பணத்தை மூன்று முறைக்கு மேல் திரும்பப் பெறுவதற்கு 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

திரும்ப பெற கட்டணம்: ரொக்க கடன் வரம்பு, நடப்பு கணக்கு மற்றும் ஓவர் டிராப்ட் கணக்கு வைத்திருப்பவர் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்யலாம். அதற்கு மேல் அதிக பணம் டெபாசிட் செய்ய வங்கிகள் கட்டணம் வசூலிக்கும். அதாவது ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொகையை டெபாசிட் செய்ய, ஒவ்வொரு ஆயிரம் ரூபாய்க்கு ஒரு ரூபாய் வசூலிக்கப்படும்.

இதற்கான குறைந்தபட்ச வரம்பு 50 மற்றும் அதிகபட்ச வரம்பு 20 ஆயிரம் ரூபாய் ஆகும். கடன் வரம்பு, நடப்புக் கணக்கு மற்றும் ஓவர் டிராப்ட் கணக்குகளில் இருந்து ஒரு மாதத்திற்கு மூன்று முறை பணம் திரும்பப் பெறப்பட்டால், கட்டணம் வசூலிக்கப்படாது. நான்காவது முறையாக திரும்பப் பெறும்போது, ​​ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 150 ரூபாய் வசூலிக்கப்பட உள்ளதாம். வாழ்க பண நாயகம். சிக்கலில் ஜனநாயகம். பாவம் மக்கள்.

Top