26/Dec/2020 10:30:44
ஈரோடு, டிச: ஈரோடு மாவட்டம் அந்தியூர் கொமராயனூர் பகுதியை சேர்ந்த நடராஜன் மகன் செல்வராஜ்(35). கூலித் தொழிலாளி. இவருக்கு விமலா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். செல்வராஜுக்கு கடந்த சில மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்டதால் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்ததால், அவரது மனைவி குழந்தைகளுடன் பிரிந்து சென்று விட்டார்.
இதனால் மேலும் மனநிலை பாதிக்கப்பட்டு, வேலைக்கு செல்லாமல் சுற்றிதிரிந்தவர் கடந்த 24-ஆம் தேதி நள்ளிரவு கொமராயனூர் பகுதியில் உள்ள மதில் சுவரில் ஏறி அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரதவிதமாக மதில் சுவரில் இருந்து கால் தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் செல்வராஜை மீட்டு முதலுதவி செய்தனர். மறுநாள் திடீரென உயிரிழந்தார். இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.