logo
புதுக்கோட்டையில் கலைஞர் கருணாநிதி உருவச்சிலை காணொலியில் மு.க.ஸ்டாலின் திறப்பு

புதுக்கோட்டையில் கலைஞர் கருணாநிதி உருவச்சிலை காணொலியில் மு.க.ஸ்டாலின் திறப்பு

01/Nov/2020 04:52:34

இதுகுறித்து, புதுகோட்டை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ். ரகுபதி,  வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.கே. செல்லப்பாண்டியன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை:

புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் பொறுப்பாளர் எஸ். ரகுபதி தலைமையில்  வடக்கு மாவட்ட  பொறுப்பாளர் கே.கே. செல்லப்பாண்டியன் வரவேற்புரையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் புதுக்கோட்டை வடக்கு ராஜவீதியிலு்ள்ள  மாவட்ட திமுக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதியின் உருவச் சிலையை  (2.11.2020) மாலை 4 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார்.

கட்சியின் முன்னோடிகளுக்கு பொற்கிழியும், மிசா சட்டம் மற்றும் சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர்களின் தியாகத்தை கௌரவிக்கும் வகையில் கலைஞர் பெயரில் தியாகச்செம்மல் விருதும் வழங்கப்படுகிறது. மேலும், தமிழகத்தை மீட்டெடுப்போம் என்ற சிறப்பு  பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உரையாற்றுகிறார்.  வடக்கு, தெற்கு மாவட்ட திமுக சார்பில் இந்தப்பொதுக்கூட்டத்தில் கட்சித்தொண்டர்கள் 600 இடங்களில்  காணொலியில் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றியப் பெருந்தலைவர்கள் மாவட்ட, ஒன்றியக் குழு உறுப்பினர்கள், அனைத்து மாவட்ட அணி, ஒன்றிய அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர், ஊராட்சித்தலைவர்கள் மற்றும் பொது அனைவரும் சமூக இடைவெளியுடன் கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடித்து  கலந்து கொள்ள வேண்டுமென அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.


Top