logo
கோவிட் தொற்றால் உயிரிழந்த வட்டாட்சியர் உருவப்படத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் அஞ்சலி

கோவிட் தொற்றால் உயிரிழந்த வட்டாட்சியர் உருவப்படத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் அஞ்சலி

20/May/2021 07:03:44

புதுக்கோட்டை, மே: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கொரோனா தொற்றால் உயிரிழந்த வட்டாட்சியர் சுரேஷ் கண்ணன்  உருவப்படத்திற்கு   ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி (20.5.2021)  வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது: கோவிட் தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.

மேலும் தமிழக அரசின் பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகள் சுகாதாரத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் முன்களப்பணியாளர்கள் மூலம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், முன்நின்று பணியாற்றும் காரணத்தினால் முன்களப்பணியாளர்கள் கோவிட் தொற்றிற்கு ஆளாகின்றனர்.

அறந்தாங்கி சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளராக பணியாற்றி வந்த வட்டாட்சியர் சுரேஷ் கண்ணன் கோவிட் தடுப்பு பணிகளை சார் ஆட்சியருடன் இணைந்து தீவிரமாக மேற்கொண்டு வந்தார். மேலும் பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதிலும் அர்ப்பணிப்புணர்வுடன் செயலாற்றி வந்தார்.

கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்ட சுரேஷ்கண்ணன்  மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனவே கோவிட் தடுப்பு பணிகளை மேற்கொண்டு வரும் முன்களப்பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கைகளை அடிக்கடி கழுவுதல் போன்ற கோவிட் தடுப்பு வழிமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும். ஏதெனும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கோவிட் பரிசோதனை செய்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.

முன்களப்பணியாளர்களின் பாதுகாப்பே பொதுமக்களின் பாதுகாப்பாகும்உயிரிழந்த சுரேஷ்கண்ணனின்  குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி.

இந்நிகழ்வில் அறந்தாங்கி சார் ஆட்சியர் ஆனந்த் மோகன்மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன் உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் பலா; கலந்து கொண்டனா;.

Top