22/May/2021 09:14:13
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே சூறைக்காற்றால் வாழைகள் சேதமடைந்த பகுதியியை சுற்றுச்சூழல், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
ஆலங்குடி பகுதியில் வியாழக்கிழமை இரவு வீசிய பலத்த காற்றில், மாஞ்சான் விடுதி ஊராட்சி பாப்பன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான வாழைமரங்கள் சேதமடைந்தன. பாதிப்புகளை ஆய்வு செய்து, உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், சுற்றுச்சூழல், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வாழைகள் சேதமடைந்த பகுதிக்குச் சென்று சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். பாதிக்கபட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறியதோடு, உரிய இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகளிடம் உறுதியளித்தார்.