logo
புதுக்கோட்டை விஜயபுரத்தில் அருள்மிகு பழனி ஆண்டவர் கோயில்  திருப்பணி  பூமி  பூஜையுடன் தொடக்கம்

புதுக்கோட்டை விஜயபுரத்தில் அருள்மிகு பழனி ஆண்டவர் கோயில் திருப்பணி பூமி பூஜையுடன் தொடக்கம்

27/Apr/2021 06:47:18

புதுக்கோட்டை, ஏப்:  புதுக்கோட்டை அருகே உள்ள விஜயபுரத்தில் அருள்மிகு பழனி ஆண்டவர் கோயில்ல் திருப்பணிகளுக்கான    பூமி பூஜை  செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


கோயில் திருப்பணிகளுக்காக கணபதி பூஜை,  லட்சுமி பூஜை, கலச ஆவாஹனம்   தீபாராதனை அரிமளம் ரவி குருக்கள் தலைமையில்   நடைபெற்றது.  நிகழ்வில், புதுக்கோட்டை தொகுதி அதிமுக வேட்பாளர், இளைய மன்னர்  கார்த்திக்தொண்டைமான் மற்றும் முக்கியபிரமுகர்கள், பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை  விஜயபுரம்  ஊர் பொதுமக்கள்,  மகளிர்குழுவினர்கள்  செய்திருந்தனர்.   கொரோனா பாதுகாப்பு வழிகாட்டுதலுடன்  இந்த பூமி  பூஜை நடைபெற்றது.      

Top