logo

திருமாவளவனை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சியினர் 150 பேர் மீது வழக்கு பதிவு

28/Oct/2020 02:22:25

ஈரோடு: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனை கண்டித்தும் அவரை கைது செய்ய வலியுறுத்தியும் ஈரோடு தெற்கு,வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் வீரப்பன் சத்திரம் பேருந்து  நிறுத்தம் அருகே  நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது .

இதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு கண்டன முழக்கமிட்டனர். பின்னர் திடீரென அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸாரின் வலியுறுத்தலை யடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

கொரோனா ஊரடங்கு தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த 40 பெண்கள் 110 ஆண்கள் என 150 பேர் மீது வீரப்பன் சத்திரம் போலீசார் இன்று வழக்கு பதிவு செய்துள்ளனர். 


Top