logo
புதுகையில் ஊரடங்கு உத்தரவை மீறி வியாபாரம் செய்த 10 கடைகளுக்கு சீல்

புதுகையில் ஊரடங்கு உத்தரவை மீறி வியாபாரம் செய்த 10 கடைகளுக்கு சீல்

23/Apr/2020 05:37:38

புதுக்கோட்டையில் ஊரடங்கு உத்தரவை மீறி கடையைத் திறந்து வியாபாரம் செய்து வந்த 10 கடைகளுக்கு கோட்டாட்சியர் தண்டாயுதபாணி வியாழக்கிழமை (ஏப் 23)சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

 கரோனோ தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில்,சட்டவிரோதமாக புதுக்கோட்டையில் பல்வேறு கடைகளை திறந்து வியாபாரம் நடைபெறுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, கோட்டாட்சியர் தண்டாயுதபாணி தலைமையிலான அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது,புதுக்கோட்டை திலகர் திடல் பகுதியில் விற்பனையில் ஈடுபட்ட பிரபல சிமெண்ட் கடை உள்ளிட்ட 10 கடைகளுக்கு கோட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் சீல் வைத்தனர்.

 

Top