17/Oct/2020 06:47:01
புதுக்கோட்டை நகரில் அருள்மிகு அரியநாச்சியம்மன் கோயிலில் நவராத்திரி விழா இன்று தொடங்கியது.
நவராத்திரி விழா 17.10.2020 தொடங்கி வருகின்ற 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, கோயிலில் அமைக்கப்பட்டுள்ள கொலுக்காட்சியில், கலையம்சம் மிக்க சரஸ்வதி, லெட்சுமி, முருகன், விநாயகர், மாரியம்மன், மீனாட்சி, துர்க்கை, மூகாம்பிகை, பஞ்சமுக ஆஞ்சநேயர், ராமாயணம், தசாவதாரம், மகாபாரதம், திருமண செட் போன்ற பல வண்ண பொம்மைகள் இடம்பெற்றுள்ளன.
ஆலயத்தில் ஸ்ரீ அரியநாச்சியம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்களுடன் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் கலைநிகழ்ச்சிகளும் நடந்தது நவராத்திரி கொலுக்காட்சியை சிறுவர்களும் பெரியவர்களும் பார்த்துச்சென்றனர்.