17/Oct/2020 05:42:30
ஈரோடு:ஈரோடு போக்குவரத்து போலீசார் சார்பில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நேற்று ஈரோட்டில் நடைபெற்றது.
ஈரோடு வடக்கு போக்குவரத்து போலீஸ் ஸ்டேசனில் இருந்து தொடங்கிய இப்பேரணியானது நாச்சியப்பா வீதி, சவீதா கார்னர், மேட்டூர்ரோடு வழியாக மீண்டும் வடக்கு போக்குவரத்து போலீஸ் ஸ்டேசன் வந்தடைந்தது. இப்பேரணியில் ஈரோடு வடக்கு டிராபிக் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகர், தெற்கு கதிரவன் மற்றும் போக்குவரத்து போலீசார் கலந்து கொண்டனர்.