logo
முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ் சகோதரர் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ் சகோதரர் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

14/May/2021 12:08:55

முன்னாள் தமிழக துணை முதல்வர் .பன்னீர்செல்வத்தின் உடன் பிறந்த நான்காவது சகோதரர் .பாலமுருகன்(61) காலமானார். இவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு..ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

துணை முதல்வர் .பன்னீர்செல்வத்தின் உடன் பிறந்த நான்காவது சகோதரர் பாலமுருகன்  தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை பகுதியில் வடக்கு அக்ரஹாரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அதிகாலை  4 45 மணி அளவில் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

இவர் நீண்ட நாளாகவே தொண்டை புற்றுநோயால் உடல்நிலை பாதிக்கப்பட்டு கேரளா மாநிலம் கொச்சினில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி வந்த நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை 4.45 உயிரிழந்தார்.

அவரது உடலுக்கு  அதிமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் அவருக்கு லதா மகேஸ்வரி என்ற மனைவியும் அஸ்மிதா என்ற மகளும் உள்ளனர். அவரது உடல் 14.5.2021 பிற்பகல்  3 மணி அளவில் நல்லடக்கம் செய்வதாக தெரிவித்தனர்.

Top