10/Jun/2021 09:35:32
புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை மாவட்டம், அம்மாபட்டிணம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பாக 17-ஆவது நாளாக (10-6 -2021) ஊரடங்கு காலத்தில் உணவுக்கு சிரமப்படும் முன்களப்பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் ஏழை மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
மந்திரி பட்டிணம் முதல் மீமிசல் வரை பல்வேறு இடங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார பணியாளர்கள், ஊர்க்காவல் படை உள்ளிட்ட முன் களப் பணியாளர்களுக்கும் மற்றும் எளிய மக்கள் 155 பேருக்கு இலவச மதிய உணவு வழங்கப்பட்டது. இதில்,உணவு வழங்கப்பட்டது.இதில் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.