22/May/2021 03:41:59
ஈரோடு, மே: ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே லாரிமோதிய விபத்தில் பைக்கில் சென்றவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
மொடக்குறிச்சி அருகே உள்ள கோவிந்த நாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (55) இவர் தனியார் தீவன ஆலையில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவர், சனிக்கிழமை காலையில் நஞ்சை ஊத்துக்குளியில் இருந்து மொடக்குறிச்சி நோக்கி தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரி எதிர்பாராதவிதமாக பைக் மீது மோதியது இதில் சரவணன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
இதுகுறித்து தகவலறிந்த மொடக்குறிச்சி காவல் ஆய்வாளர் தீபா மற்றும் போலீசார் பிரேத த்தை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு மொடக்குறிச்சி எம்எல்ஏ- டாக்டர். சரஸ்வதி நேரில் சென்று பார் வையிட்டு ஆறுதல் கூறினார். இறந்த சரவணனுக்கு மனைவி லட்சுமி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.