logo
7-ஆவது பொருளாதார கணக்கெடுக்கும் பணி ஈரோடு கருங்கல்பாளையத்தில் தொடக்கம்

7-ஆவது பொருளாதார கணக்கெடுக்கும் பணி ஈரோடு கருங்கல்பாளையத்தில் தொடக்கம்

15/Oct/2020 05:54:59

ஈரோடு:மத்திய அரசின் ஏழாவது பொருளாதார கணக்கெடுக்கும் பணி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கியது. அதனைத் தொடர்ந்துமாதமாக நடைபெற்று வந்த கணக்கெடுக்கும் பணி கொரோனா  வைரஸ் தொற்று காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று ஈரோடு மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட கருங்கல்பாளையம் திருநகர் காலனியில் இன்று முதல் மீண்டும் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

ஈரோடு மாநகராட்சி பகுதியில் 6 குழுக்களாகப் பிரித்து கணக்கெடுக்கும் பணி மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு குழுவிலும் தலா 5 பேர் உள்ளனர். அவர்கள் நேரடியாக வீட்டிற்கு சென்று வீட்டில் உள்ளவர்கள் பெயர் அவர்கள்  செய்யும் தொழில் ஆண்டு வருமானம் அரசு வேலையா. தனியார் நிறுவனத்தில் வேலையா. செல்போன் எண் போன்ற கேள்விகளை கேட்டு பதிவு செய்து வருகின்றனர்.

நிறுவனமாக இருந்தால் எத்தனை பேர் வேலை செய்கிறார்கள். எவ்வளவு வருமானம் போன்ற கேள்விகளை  கேட்டு பதிவு செய்து கொள்கின்றனர். இந்த பணி இன்னும் இரண்டு மாதம்  தொடர்ந்து  நடைபெறும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

Top