logo
 புதுக்கோட்டை மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு  100 இடங்களில்  கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்த நடவடிக்கை : அமைச்சர் மெய்யநாதன் தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 100 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்த நடவடிக்கை : அமைச்சர் மெய்யநாதன் தகவல்

26/May/2021 10:21:00

புதுக்கோட்டை, மே: புதுக்கோட்டை மாவட்டத்தில் நாள் ஒன்று  100 இடங்களில்  கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்  சுற்றுச்சூழல்  காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை  அமைச்சர்  சிவ.வீ. மெய்யநாதன் தகவல்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், மறமடக்கி அரசினர் ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் கவனிப்பு மையத்தினை  (26.05.2021)  ஆட்சியர் பி. உமாமமகேஸ்வரி முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 இந்த ஆய்விற்கு பின் அமைச்சர்  மேலும் கூறியதாவது: முதல்வர்  மேற்கொண்டு வரும் கோவிட் தடுப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து நோயாளிகள் வசிக்கும் அந்தந்த பகுதிகளிலேயே கோவிட் மையங்கள் ஏற்படுத்தி அங்கு சிகிச்சை அளித்து குணப்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் தற்போது  மறமடக்கி அரசினர் ஆதிதிராவிடர் நல மாணவார் விடுதியில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் கவனிப்பு மையம் ஆய்வு செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகமாக கொரோனா தொற்று பாதிப்படைந்துள்ள பகுதிகளில் வீடு வீடாக சென்று மருத்துவத்துறை, வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கொண்ட குழு  சம்மந்தப்பட்ட ஊராட்சி வார்டுகளில் அமைக்கப்பட்ட குழுவினருக்கு தெர்மல் ஸ்கேன் கருவி, பல்ஸ்ஆக்ஸி மீட்டர் கருவி போன்றவற்றை வழங்கப்பட்டு பொதுமக்களை பரிசோதித்து கோவிட் நோயாளிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, அந்தந்த பகுதிகளிலேயே கோவிட் கவனிப்பு மையங்கள் அமைத்து  சத்தான உணவு வழங்கப்பட உள்ளது.

 புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக அளவில்  தடுப்பூசி  போடும் வகையில் ஒரு நாளைக்கு 100 இடங்களில்  மருத்துவ முகாம்கள் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருக்கும் இடங்களை தவிர்த்து, அதன் அருகில் உள்ள ஊர்களிலும் மருத்துவ முகாம்கள் நடத்தி தடுப்பூசி போடவும் நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளதுபொதுமக்கள் தங்களை கோவிட் தொற்றில் இருந்து பாதுகாக்க கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

 புதுக்கோட்டை மாவட்டத்தில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி  செலுத்த  6,000 எண்ணிக்கையிலும், 18 -இல் இருந்து 44 வயதுக்கு  உள்பட்டவர்களுக்கு 20,000 எண்ணிக்கையிலும் கோவிட் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதுமேலும் தினமும் 7,000 முதல் 8,000 நபர்கள் வரை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி  செலுத்தி கோவிட் இல்லா தமிழகத்தை உருவாக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை முதல்வர் மேற்கொண்டு வருகிறார்.

முழு ஊரடங்கு காலத்தில்புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவிட் தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும் மாவட்டத்தில் தேவையான இடங்களில் கோவிட் சித்தா சிகிச்சை மையம் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், குறைந்தபட்சம் ஒரு சட்டமன்ற தொகுதியில் ஒரு கோவிட் சித்தா சிகிச்சை மையம் தொடங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும் கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 50 மருத்துவர்கள் மற்றும் 10 செவிலியர்கள் தற்காலிகமாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவிட் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றார் அமைச்சர் மெய்யநாதன்.

 

முன்னதாக, ஆலங்குடி வட்டம், வடகாடு பகுதியில் மழையால் சேதமடைந்த வாழைத்தோட்டங்களை அமைச்சர்ல பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், அறந்தாங்கி சார் ஆட்சியர் ஆனந்த் மோகன், வருவாய் கோட்டாட்சியர்  டெய்சிகுமார்பொது சுகாதார துணை இயக்குநர் விஜயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

Top