13/Oct/2020 04:59:21
ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலகம் அருகில் ரூ. 35 லட்சம் மதிப்பில் புதுப்பித்து சீரமைக்கப்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க ராணிமங்கம்மாள் குளத்தை தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சிவனருள்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், , நகர செயலாளர் எஸ்.பி. சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.